ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!


ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!
x

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'ஜெ.ஆர் 30' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு உள்ளது.

இதைத்தொடர்ந்து, இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படமொன்றில் நடிக்கிறார். 'ஜெ.ஆர் 30' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நட்ராஜ், வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ஜெ.ஆர் 30' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் 30-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story