பிருந்தா கோபால் இயக்கும் 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
நடன இயக்குனர் பிருந்தா கோபால் இயக்கும் 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரபல நடன இயக்குனர் பிருந்தா கோபால், துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஹே சினாமிகா' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பிருந்தா ஆக்சன் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், ஹிரிது ஹருண், அனஸ்வரராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. நவம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.