உலகின் சிறந்த 50 நடிகர்கள் பட்டியல்: ஒரே இந்திய நடிகராக இடம் பிடித்த ஷாருக்கான்


உலகின் சிறந்த 50 நடிகர்கள் பட்டியல்: ஒரே இந்திய நடிகராக இடம் பிடித்த ஷாருக்கான்
x

உலகின் 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் 50 சிறந்த நடிகர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. திரையுலக ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இதை தயார் செய்து வெளியிட்டு உள்ளனர். இதில் பல முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் இடம்பெற்று உள்ளனர்.

ஷாருக்கான் பெயரும் இந்த 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அவருக்கு கிடைத்த பெரிய கவுரவமாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பாஜி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ஷாருக்கானின் நடிப்பு பயணம் தொடங்கியது 1992-ல் தீவானா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். 'தில்வாலே துல்ஹனியா லெ ஜாயங்கே' காதல் படத்தில் நடித்த பிறகு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து மளமளவென முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தீபிகா படுகோனேவுடன் நடித்துள்ள 'பதான்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்ற பாடல் காட்சியில் தீபிகா படுகோனே காவி நீச்சல் உடையில் நடித்தது எதிர்ப்பை கிளப்பி உள்ளது. படத்தை தடை செய்யும்படி போராட்டங்கள் நடக்கின்றன.


Next Story