9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோதும் விஜய் -அஜித் படங்கள்...!


9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோதும் விஜய் -அஜித் படங்கள்...!
x

இரு நடிகர்கள் ரசிகர்களும் இப்போதே இணையத்தில் சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் .இவர்கள் படங்கள் வெளியாகும் நாளன்று மொத்த திரையரங்குகளுமே விழாக்கோலமாக காட்சியளிக்கும். இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் மோதிக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது இந்த படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இரு நடிகர்கள் ரசிகர்களும் இப்போதே இணையத்தில் சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இருபடங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் வெளியானது.



Next Story