விபத்தில் சிக்கி படுகாயம்... விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை


விபத்தில் சிக்கி படுகாயம்... விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை
x

‘பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு சென்னையில் பிரபல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி பங்கேற்று நடித்தபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்றபோது இன்னொரு படகில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. வாய்ப்பகுதி சேதம் அடைந்தது. பற்கள் உடைந்தன.

சுய நினைவிழந்து தண்ணீருக்குள் மூழ்க போன விஜய் ஆண்டனியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது உடல்நிலை தேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். சென்னை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார். இதையடுத்து விஜய் ஆண்டனி இன்று (புதன்கிழமை) லங்கா தீவில் இருந்து விமானத்தில் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து இரவு சென்னை திரும்ப இருக்கிறார். சென்னையில் பிரபல ஆஸ்பத்திரியில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story