'எங்கள் இலக்கு தமிழ்நாடு தான்' - வைரலாகும் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் - வீடியோ


எங்கள் இலக்கு தமிழ்நாடு தான் - வைரலாகும் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் - வீடியோ
x
தினத்தந்தி 1 Sept 2022 11:11 AM IST (Updated: 1 Sept 2022 11:30 AM IST)
t-max-icont-min-icon

வேறுவேறு கண்டத்தில் இருந்து திரும்பி வந்தாலும், சேரும் இடம் எப்போதும் தமிழ்நாடு தான் சென்னை விமான நிலையத்தில் இசைஞானியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்

சென்னை:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைஞானி இளையராஜாவுடன் விமான நிலையத்திலிருந்து ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு பேட்டரி வாகனத்தில் இளையராஜாவுக்கு அருகில் ஏ.ஆர்.ரகுமானும் அமர்ந்துள்ளார்.

ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோல் அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அந்த வீடியோவைப் பற்றி அவர், "நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்" என்று பதிவிட்டுள்ளார். தான் அமெரிக்காவில் இருந்தும் இளையராஜா ஹங்கேரியில் இருந்தும் திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா போஸ்ட்டில் இளையராஜாவையும் ரகுமான் டேக் செய்துள்ளார்.

இந்த இன்ஸ்டா வீடியோ 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி உள்ளது.



Next Story