பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காது ஏன்? மணிரத்னம் விளக்கம்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
சென்னை,
கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்தது.
பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் - 1 வெளியான 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காது ஏன்? என இயக்குநர் மணிரத்னம் கூறியதாவது:-
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் அன்புடன் கேட்டது உண்மைதான். இந்த கதை நிறைய கதாபாத்திரங்களை கொண்டது. எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை கொண்டு வருவது சரியாக இருக்காது என்பதால் தான் வேண்டாம் என மறுத்து விட்டேன்.