சாகசம் செய்த 'சார்பட்டா' நாயகி
சார்பட்டா நாயகி துஷ்ரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்துள்ளார் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
'சார்பட்டா' படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் துஷாரா விஜயன். தோழிகளுடன் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் துஷாரா அங்கு ஸ்கை டைவிங் என்று சொல்லக்கூடிய அந்தரத்தில் பறக்கும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
துபாய் துறைமுகம் பகுதியில் விமானத்தில் பறந்த அவர், அதில் இருந்து தனது தோழியுடன் வானில் குதித்து, சாகசம் செய்து பின்னர் 'பாராசூட்' உதவியுடன் தரையிரங்குகிறார். இந்த வீடியோ காட்சியை தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். 'சார்பட்டா' நாயகி சாகச நாயகி ஆகிவிட்டார் என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். துஷாரா தற்போது 'அநீதி', 'நட்சத்திரம் நகர்கிறது' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story