"உங்கள் குரல் எங்கள் இதயங்களில் " பாடகர் கே.கே. மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கம்
உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் என பாடகர் கே.கே.மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கமாக டுவீட் செய்துள்ளார்.
சென்னை,
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது.
பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 53.
இந்தநிலையில் நடிகர் சூர்யா டுவிட்டர் பதிவில்,
உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் #உயிரின் உயிரே இன்னும் பல...! #RIPKK என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story