மைக்கேல் ராயப்பன் படத்தில் மீண்டும் அதர்வா


மைக்கேல் ராயப்பன் படத்தில் மீண்டும் அதர்வா
x
தினத்தந்தி 20 Jun 2017 6:02 AM GMT (Updated: 2017-06-20T11:32:39+05:30)

குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் ‘நாடோடிகள்,’ ‘ஈட்டி,’ ‘மிருதன்’ போன்ற தரமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்தவர், மைக்கேல் ராயப்பன்.

 இவர் தற்போது, சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்,’ ஜீவா-நிக்கி கல்ராணி நடிப்பில் ‘கீ’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

இதையடுத்து மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில், மீண்டும் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தை சாம் ஆண்டன் டைரக்டு செய்கிறார். இவர், ‘டார்லிங்,’ ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.

படத்தை பற்றி மைக்கேல் ராயப்பன் கூறும்போது, “ஒரு விளையாட்டு வீரரின் கதையை யதார்த்தமாக வணிக அம்சங்கள் கலந்து சொன்ன படம்தான் ‘ஈட்டி.’ இந்த படத்துக்குப்பின் நானும், அதர்வாவும் அடுத்த படத்தில் இணைந்து இருக்கிறோம். சாம் ஆண்டனின் நகைச்சுவை கலந்த திரைக்கதையும், அதர்வா வின் அர்ப்பணிப்பான நடிப்பும் இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

Next Story