சினிமா துளிகள்

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை + "||" + World's highest paid actress

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை
உலகிலேயே அதிகமாகச் சம்பாதிக்கும் நடிகை என்ற பெருமை ‘லா லா லேண்ட்’ திரைப்பட நாயகி எம்மா ஸ்டோனிற்கு கிடைத்திருக்கிறது.
வர் ‘தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’, ‘பேர்ட்மேன்’ போன்ற படங்களிலும் நடித்தவர். 

சமீபத்தில் நடித்த ‘லா லா லேண்ட்’ என்ற இசை சார்ந்த ஆங்கிலப் படம் எம்மா ஸ்டோனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. அந்த படத்தின் வெற்றி எம்மாவின் சம்பளத்தையும் எக்குத்தப்பாக உயர்த்தியிருக்கிறது. ‘பேர்ட்மேன்’ படத்திற்காக ‘சிறந்த துணை நடிகை’க்கான ஆஸ்கார் பரிந்துரை, ‘லா லா லேண்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது என... எம்மாவின் புகழ் படிப்படியாக உயர்ந்துவிட்டது. அதனால் அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், ஹாலிவுட் தயாரிப்பாளர்கள். அதனால் ஹாலிவுட் பட நாயகிகளில் மிக அதிகமாகச் சம்பாதிப்பது இவர் தானாம். 

சமீபத்தில், ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் 28 வயதான எம்மா ஸ்டோன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் அவர் 180 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக போர்ப்ஸ் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. தற்போது, ‘ப்ரண்ட்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை எம்மா ஸ்டோன், ஸ்மார்ட் வாட்டர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் தூதுவராகவும் இருந்து வருகிறார். 

இவரை அடுத்து, நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். 2016–ம் ஆண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜெனிபர் லாரன்ஸ் இம்முறை மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.