பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புக்கு வரும் 2 கதாநாயகிகள்!


பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புக்கு வரும் 2 கதாநாயகிகள்!
x
தினத்தந்தி 12 Sep 2017 6:12 AM GMT (Updated: 12 Sep 2017 6:12 AM GMT)

‘நம்பர்-1’ நடிகை தனக்கு போட்டியாக எந்த கதாநாயகியையும் நினைப்பதில்லை.

 ஆனால், அவரை சில கதாநாயகிகள் போட்டியாக நினைக்கிறார்களாம். அவர்களில், ‘...தா’ நடிகையும் ஒருவர். சமீபகாலமாக, ‘நம்பர்-1’ நடிகை 6 பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட ‘...தா’ நடிகை, தனக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி, 6 பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புக்கு வருகிறார். பாதுகாவலர்களுக்கு சம்பளமாக தயாரிப்பாளர்களிடம் இருந்து தினமும் ரூ.50 ஆயிரம் தனியாக அவர் வாங்கிக் கொள்கிறாராம். “இதெல்லாம் ரொம்ப ஓவர்” என்று முணுமுணுத்த ஒரு தயாரிப்பாளரிடம், “அந்த நடிகைக்கு கொடுக்கிறீர்கள் அல்லவா? அதேபோல் எனக்கும் கொடுங்கள். அவரை விட, நான் எந்த வகையிலும் குறைந்தவள் அல்ல” என்றாராம்!

Next Story