கத்தரிப்பு எங்கே..?


கத்தரிப்பு எங்கே..?
x
தினத்தந்தி 23 Sep 2017 7:33 AM GMT (Updated: 23 Sep 2017 7:33 AM GMT)

டாப் லெஸ் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், முத்தக் காட்சிகள் என படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை என்று கூறப்படுகிறது.

ராய் லட்சுமி நடித்துள்ள பாலிவுட் படம் ‘ஜூலி 2’. இந்த படத்தின் மூலம் ராய் லட்சுமி இந்தியில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதற்காகவோ என்னவோ தெரியவில்லை படத்தில் படுகவர்ச்சி காட்டியிருக்கிறார். 

டாப் லெஸ் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், முத்தக் காட்சிகள் என படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தில் பல காட்சிகள் சென்சாரில் நீக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தில் உள்ள எந்த காட்சிகளுக்கும் கத்தரி போடாமல், திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கும் காரணம் இருக்கிறதாம். 

தீபக் சிவதாஷினி இயக்கியுள்ள இந்த படத்தை, முன்னாள் திரைப்பட தணிக்கையாளர்கள் பஹ்லஜ் நிகாலானி, விஜய் நாயர் ஆகியோர் தயாரித்துள்ளதால், திரைப்படத்திற்கு கத்தரிப்பு  இல்லாமல் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story