சினிமா துளிகள்

50 வருடங்களில் சத்யா மூவீஸ் + "||" + In 50 years, Sathya Movies

50 வருடங்களில் சத்யா மூவீஸ்

50 வருடங்களில் சத்யா மூவீஸ்
பழம்பெரும் பட நிறுவனமான சத்யா மூவீஸ் தனது 50-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் சொந்த பட நிறுவனம், சத்யா மூவீஸ். இந்த நிறுவனம் தயாரித்த 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்து இருந்தார். அவரைப் போலவே ரஜினிகாந்தும் 6 படங்களில் நடித்து இருக்கிறார். 2 படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

பழம்பெரும் பட நிறுவனமான சத்யா மூவீஸ் தனது 50-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, இந்த நிறுவனம் தயாரித்த ‘இதயக்கனி,’ ‘மூன்று முகம்,’ ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை டிஜிட்டலில் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. எம்.ஜி.ஆர். நடித்த ‘காவல் காரன்’ (கருப்பு-வெள்ளை) படத்தை கலரில் கொண்டு வரும் முயற்சியும் நடைபெறுகிறது.

இந்த தகவல்களை ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ் வீரப்பன் தெரிவித்தார்.