சினிமா துளிகள்

3 கதாநாயகிகள் போட்டி! + "||" + 3 heroines competition!

3 கதாநாயகிகள் போட்டி!

3 கதாநாயகிகள் போட்டி!
உச்ச நட்சத்திரத்தை வைத்து கார்த்திகை டைரக்டர் இயக்கும் புது படத்தில், உ.ந.வுடன் எப்படியாவது ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று மூன்று பிரபல கதாநாயகிகள் போட்டி போடுகிறார்கள்.
ஒருவர், உடைகளை மாற்றுவது போல் காதலர்களை மாற்றுபவர். இன்னொருவர், ஜீவராசிகளின் சினேகிதி. மற்றொருவர், இனிப்புக்கடை!

முதல் நடிகை, சம்பள குறைப்பு செய்யக்கூட தயார் என்கிறார். இரண்டாவது நடிகையும் சம்பள விஷயத்தில் இறங்கி வருகிறார். மூன்றாவது நடிகையான ‘இனிப்புக்கடை’யோ பட வாய்ப்பை பிடித்து தருபவருக்கு ‘கமிஷன்’ கொடுப்பதாக ஆசை காட்டுகிறாராம்!