சினிமா துளிகள்

காதலரை கதாநாயகனாக்க முயற்சி செய்யும் ‘நம்பர்-1’ + "||" + Try to be the hero of the lover

காதலரை கதாநாயகனாக்க முயற்சி செய்யும் ‘நம்பர்-1’

காதலரை கதாநாயகனாக்க முயற்சி செய்யும் ‘நம்பர்-1’
டைரக்டரை கதாநாயகனாக்கும் முயற்சியில் நம்பர்-1 நடிகை ஈடுபட்டு இருக்கிறார்.
‘நம்பர்-1’ நடிகை முதலில் மூன்றெழுத்து நடிகர் மீது காதல்வசப்பட்டார். அந்த காதல் முறிந்ததும், ஆட்ட நாயகனை பிடித்தார். அவருடன் திருமணம் வரை நெருங்கினார். கடைசி நேரத்தில், அந்த காதலும் முறிந்து போனது. “புதுசாக ஒரு டைரக்டரை பிடித்து அவரை பிரபலமாக்கி திருமணம் செய்து கொள்கிறேன், பார்” என்று ஆட்ட நாயகனிடம் அவர் சவால் விட்டார்.

அதன்படி, இரண்டு சாமிகளின் பெயர்களை கொண்ட இளம் டைரக்டரை பிடித்து தன்வசப்படுத்தி, அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறார். அதற்கு முன்பாக, டைரக்டரை கதாநாயகனாக்கும் முயற்சியில், ‘நம்பர்-1’ நடிகை மிக தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். முகச்சாயம் பூசிய டைரக்டரை விரைவில் பார்க்கலாம்! 

ஆசிரியரின் தேர்வுகள்...