சினிமா துளிகள்

உற்சாகம் தந்த போஸ்டர் + "||" + Enthusiastic poster

உற்சாகம் தந்த போஸ்டர்

உற்சாகம் தந்த போஸ்டர்
‘பரத் அன நேனு’ படத்திற்கான போஸ்டர் ஒன்று யுகாதி பண்டிகையின் போது வெளியிடப்பட்டது.
கொரட்டால சிவாவின் இயக்கத்தில் ‘பரத் அன நேனு’ என்ற அரசியல் படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இதில் அவர் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரட்டால சிவா இதுவரை இயக்கிய ‘மிர்ச்சி’, ‘ஸ்ரீமந்துடு’, ‘ஜனதா கேரேஜ்’ ஆகிய மூன்று திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அதுவும் இந்தப் படத்திற்கான போஸ்டர் ஒன்று யுகாதி பண்டிகையின் போது வெளியிடப்பட்டது. அந்தப் போஸ்டரில், மகேஷ்பாபு பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை அணிந்து, பாதுகாப்பு வீரர்கள் சூழ நடந்து வருவதுபோல் அந்தக் காட்சி இருந்தது. இந்த போஸ்டர் மகேஷ்பாபு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...