சினிமா துளிகள்

எடை குறைக்கும் என்.டி.ஆர். + "||" + Reducing weight NTR

எடை குறைக்கும் என்.டி.ஆர்.

எடை குறைக்கும் என்.டி.ஆர்.
சுமார் 10 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் திரிவிக்ரம் சீனிவாஸ். ‘நுவ்வே நுவ்வே’, ‘அதடு’, ‘ஜுலாய்’, ‘அத்தாரின்டிக்கி தாரெடி’ போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இவர். இவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்க ஒரு படம் தயாராக இருக்கிறது. இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைக்கும்படி, ஜூனியர் என்.டி.ஆரிடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். இதையடுத்து உடற்பயிற்சிக்கூடமே கதியென்று கிடந்து, சுமார் 10 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஆனால் ‘இன்னும் 5 கிலோ குறைத்துவிடுங்கள்’ என்று கூறி அனுப்பியிருக்கிறாராம் திரிவிக்ரம்.

இவரது படத்திற்கு அடுத்ததாக ராஜமவுலி இயக்கும் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடிக்க உள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.