சினிமா துளிகள்

தெலுங்கில் பிக்பாஸ்-2 + "||" + Big Pass in Telugu

தெலுங்கில் பிக்பாஸ்-2

தெலுங்கில் பிக்பாஸ்-2
தெலுங்கில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியைத் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறார்கள்.
தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் போல, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர். இறுதிவரை கலகலப்பாக நடத்திக் காட்டினார். இந்த நிலையில் தெலுங்கில் வருகிற ஜூன் மாதத்தில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியைத் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறார் கள். இதனையும் நடத்தித்தரும்படி ஜூனியர் என்.டி.ஆரை அணுகியிருந்தார்கள். ஆனால் அவர், ‘படங்களில் பிசியாக இருப்பதால், இப்போது முடியாது’ என்று மறுத்துவிட்டார். இதையடுத்து பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை நடத்த ‘நான் ஈ’ படத்தில் நடித்த நானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக் கிறார். இவர் நடிப்பில் ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் நானி கலந்து கொள்வார் என்று கருதப்படுகிறது. நானி, சினிமாத் துறைக்கு வருவதற்கு முன்பாக ஆர்.ஜே.வாக இருந்தவர் என்பதால், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் அவருக்கு சிரமம் இருக்காது என்கிறார்கள். 

ஆசிரியரின் தேர்வுகள்...