சினிமா துளிகள்

ரூ. 3 கோடி சம்பளம் கேட்ட நடிகை! + "||" + Rs. 3 crore salary

ரூ. 3 கோடி சம்பளம் கேட்ட நடிகை!

ரூ. 3 கோடி சம்பளம் கேட்ட நடிகை!
‘சித்திரம்’ டைரக்டர் அடுத்து ஒரு ‘வாரிசு’ நடிகரை வைத்து படம் இயக்க முன்வந்து இருக்கிறார்.
‘சித்திரம்’ டைரக்டரின் படத்தில் ‘வாரிசு’ நடிகருக்கு ஜோடியாக 2 நடிகைகள். அதில் ஒருவர், மேனன் நடிகை. இன்னொரு நாயகி வேடத்துக்காக, ‘சாய்’ நடிகையை அணுகினார்கள். அவர் எடுத்ததும், “ஹீரோ யார்?” என்று கேட்டார். சொன்னார்கள்.

உடனே ‘சாய்,’ “மூன்று கோடி கொடுத்தால் நடிக்கிறேன்” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். “இவ்வளவு அதிக சம்பளமா? அது எங்களுக்கு கட்டுப்படியாகாது” என்று படக்குழுவினர் திரும்பி விட்டார்கள். (“நான் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதனால்தான் அதிக சம்பளம் கேட்டு, அவர்களை திரும்பி போக வைத்தேன்” என்கிறார், சாய்! )