சினிமா துளிகள்

தெலுங்கில் புருவ அழகி + "||" + In Telugu Eyebrow brunette

தெலுங்கில் புருவ அழகி

தெலுங்கில் புருவ அழகி
தனது ஒரே ஒரு புருவ அசைவால் சமீபத்தில் மிகப்பிரபலமானவர் பிரியா வாரியர்.
பிரியா வாரியர் மலையாளத்தில் ‘ஒரு ஆதார் லவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில்தான் தனது புருவத்தை உயர்த்தும் செயல்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அவர். இந்தப் படம் இன்னும் வெளிவரத நிலையில், பிரியா வாரியருக்கு மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கிறதாம். ஆசிஷ்ராஜ் நடிப்பில் வெளியான படம் ‘ஈகோ’. இந்தப் படத்தை தயாரித்த நிறுவனத்தின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா வாரியரை ஒரு பெரிய தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். இந்தப்படத்திலும் ஆசிஷ்ராஜ் தான் கதாநாயகனாக நடிக்கிறாராம்.