சினிமா துளிகள்

படக்குழுவை கவர்ந்த இசையமைப்பாளர் + "||" + The crew favorite composer

படக்குழுவை கவர்ந்த இசையமைப்பாளர்

படக்குழுவை கவர்ந்த இசையமைப்பாளர்
மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் ‘ஓடியன்’ திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
டியன் படம் பிளாக் மேஜிக் மற்றும் வசியம் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய திரில்லர் கதையம்சம் கொண்டதாகும். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி (ஸ்கோர்) இசையமைக்கிறார். இவர், தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம்வேதா’ திரைப்படத்திற்கு இசையமைத்தவர். ‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு ரசிகர்களின் கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மாறியிருக்கும் இவர் ‘ஓடியன்’ திரைப் படத்திற்காக மெனக்கெட்டு வருகிறாராம். ‘ஓடியன்’ திரைப்படக் கதை ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெறுவதால், இசைக்கு கேரளாவின் பழங்கால இசைக்கருவிகளை உபயோகிக்க முடிவு செய்திருக்கிறாராம் சாம். சுமார் 6 அடி மூங்கில் இசைக்கருவி ஒன்று, கேரளாவின் புராதன இசைக்கருவியாக இருக்கிறதாம். அதனை இசைக்கத் தெரிந்த ஒரு வயதானப் பெண்ணை வைத்து, படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறாராம் சாம். படப்பிடிப்பே முழுமையாக முடிவடையாத நிலையில், சில காட்சிகளுக்கு இசையமைத்து ஒட்டுமொத்தப் படக்குழுவையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.