சினிமா துளிகள்

அறிமுக நாயகன்.. ரூ.50 கோடி.. + "||" + Introductory Man

அறிமுக நாயகன்.. ரூ.50 கோடி..

அறிமுக நாயகன்.. ரூ.50 கோடி..
மலையாள உச்ச நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் அறிமுகமான படம் ‘ஆதி’.
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஆதி’ படத்தை ‘த்ரிஷ்யம்’ படத்தின் வெற்றி இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். நூறாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடியை வசூல் செய்து கொடுத்துள்ளதாம். ஒரு அறிமுக நாயகனின் படம், மலையாள உலகில் இந்த அளவுக்கு வசூலை வாரிக்குவித்திருப்பது இதுவே முதன் முறை என்கிறார்கள். இதற்கு முன்பாக மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான், பிரபல இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசில் ஆகியோர் அறிமுகமான படங்கள் கூட இப்படி ஒரு வெற்றியைப் பெற்றதில்லை என்பதால், நடிகர் பிரணவை இயக்குவதில், மலையாள இயக்குனர்களிடையே போட்டி நிலவுகிறதாம்.