சினிமா துளிகள்

‘வேலையில்லா பட்டதாரி’ 3-ம் பாகம் தயாராகிறது + "||" + velaiilla pattadhari-3

‘வேலையில்லா பட்டதாரி’ 3-ம் பாகம் தயாராகிறது

‘வேலையில்லா பட்டதாரி’ 3-ம் பாகம் தயாராகிறது
வேலையில்லா பட்டதாரி மூன்றாம் பாகத்தை தயாரிக்க தனுஷ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ்-அமலாபால் ஜோடியாக நடித்து, வேல்ராஜ் டைரக்டு செய்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது. அதில் தனுஷ்-அமலாபால்-கஜோல் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்டு செய்திருந்தார்.

அடுத்து இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரிக்க தனுஷ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில், கதாநாயகி மாறுவார் என்று தெரிகிறது. டைரக்டர் யார்? என்பதும் முடிவாகவில்லை!