சினிமா துளிகள்

போலீஸ் அதிகாரிகளாக 2 டைரக்டர்கள் + "||" + 2 directors are Police officers

போலீஸ் அதிகாரிகளாக 2 டைரக்டர்கள்

போலீஸ் அதிகாரிகளாக 2 டைரக்டர்கள்
விஜய் மில்டன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி ஒளிப்பதிவுடன் டைரக்டும் செய்திருக்கும் ‘கோலி சோடா-2,’ வாழ்க்கையில் போராடுபவர்களை பற்றிய கதை.
டைரக்டர்கள் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து இருக்கிறார்கள்.

கதாநாயகன் புதுமுகம் வினோத்தின் அம்மாவாக ரேகாவும், கதாநாயகி புதுமுகம் சுபிக்ஷாவின் அம்மாவாக ரோகிணியும் நடித்துள்ளனர். டைரக்டர் விஜய் மில்டனின் தம்பி பரத் சீனி படத்தை தயாரித்திருப்பதுடன், ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார்.


இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், இம்மாதம் இரண்டாவது வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது.