கால்பந்தாட்ட வீரராக அதர்வா!


கால்பந்தாட்ட வீரராக அதர்வா!
x
தினத்தந்தி 15 Jun 2018 8:41 AM GMT (Updated: 15 Jun 2018 8:41 AM GMT)

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து, `பூமராங்’ என்ற படத்தை தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார்.

 `பூமராங்’ என்றால் கர்மா என்று அர்த்தம். நாம் ஒரு நல்லது செய்தால், அது எந்த ரூபத்திலாவது நமக்கு உதவும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட படம், இது என்கிறார், டைரக்டர் ஆர்.கண்ணன். அவர் மேலும் கூறுகிறார்:-

``இந்த படத்தில், அதர்வா ஒரு கால்பந்தாட்ட வீரராக-ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்பவராக நடித்து இருக்கிறார். மேகா ஆகாஷ், `விஸ்காம்’ படித்த பெண்ணாக வருகிறார். இந்துஜா, ஐ.டி. ஊழியராக நடித்துள்ளார். சென்னை, அருப்புக்கோட்டை, தேனி, அந்தமான் தீவு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. ஆகஸ்டு 15-ந் தேதி, படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’ 

Next Story