சினிமா துளிகள்

சரிதா தங்கை மகள் கதாநாயகி + "||" + Sarita's daughter is heroine

சரிதா தங்கை மகள் கதாநாயகி

சரிதா தங்கை மகள் கதாநாயகி
பிரபல நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
`ஆரோகணம்,‘ `நெருங்கி வா முத்தமிடாதே,‘ `அம்மணி’ ஆகிய படங்களை டைரக்டு செய்த லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழி படங்களில் நடித்தும் இருக்கிறார். `சொல்வதெல்லாம் உண்மை' என்ற டி.வி. நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். `அம்மணி‘ படத்தை அடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் இன்னொரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதில், பிரபல நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ``இது, எனக்கு சவாலான கதையம்சம் கொண்ட படம்‘‘ என்கிறார், டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன்.