‘பூமராங்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர், மேகா ஆகாஷ்.
‘என்னை நோக்கி பாயும் தோட்டா,’ ‘ஒரு பக்க கதை,’ ‘பூமராங்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், மேகா ஆகாஷ். இவருக்கு தமிழில் புது பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய படத்தில், ரஜினிகாந்தின் மருமகளாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!
‘நான் எப்போது வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவேன்’ என்று ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் கூறுவார். அது அவரது அரசியல் பிரவேசத்துக்கும் சரியாக பொருந்தும்.