சினிமா துளிகள்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு! + "||" + Put an end to the problem, simbu!

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு!

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு!
அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் பட கதாநாயகர்களில், சிம்புவும் ஒருவர்.
சிம்புவுக்கு சர்ச்சைகளையும், வெற்றி-தோல்விகளையும் தாண்டி, பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருப்பினும் சிம்பு தன்னை ஒரு பெரிய ஹீரோ என்றோ, தனக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றோ கர்வம் கொள்ளாமல், தன்னை ஒரு ரசிகர் என்றே காட்டிக் கொள்கிறார்.

ஆரம்ப காலத்தில் தன்னை ரஜினி ரசிகர் என்று சொல்லி வந்த அவர், பின்னர் தன்னை அஜித் ரசிகர் என்று காட்டிக் கொண்டார். இது தொடர்பாக அவரை சிலர் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். ``சிம்பு தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவே அஜித் ரசிகர் என்று கூறிக்கொள்கிறார்'' என்று கிண்டல் செய்தார்கள்.

இது, சிம்புவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும், ``அஜித் ரசிகர்களும், என் ரசிகர்களும் என்னைப் பற்றி மிக நன்றாக புரிந்து கொண்டவர்கள். அதனால் இதுபற்றி அதிகமாக பேச விரும்பவில்லை'' என்று நாகரிகமாக அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு!