சினிமா துளிகள்

முதல் சம்பளத்தில் படிப்புக்கு உதவி! + "||" + Help for Study at First Salary!

முதல் சம்பளத்தில் படிப்புக்கு உதவி!

முதல் சம்பளத்தில் படிப்புக்கு உதவி!
2009-ம் ஆண்டில், `திரு திரு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி அய்யர்.
ஜனனி அய்யர் `விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் நடித்ததன் மூலம் பேசப்பட்டார். பாலாவின் `அவன் இவன்' படத்தில் நடித்த பின், ஜனனி அய்யர் பிரபலமானார்.

அந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மலையாள பட வாய்ப்புகளும் வந்தன. சில மலையாள படங்களில் நடித்தார். என்றாலும், ஜனனி அய்யருக்கு குறிப்பிட்டு சொல்லும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.


அவரிடம், ``உங்கள் முதல் சம்பளத்தை எப்படி செலவு செய்தீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜனனி அய்யர் கூறும்போது, ``என் முதல் சம்பளத்தை வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனின் `ஸ்கூல் பீஸ்' கட்டுவதற்கு கொடுத்து விட்டேன்'' என்றார்.