சினிமா துளிகள்

மம்முட்டி வில்லனாக நடிப்பாரா? + "||" + Will Mammootty act as villain?

மம்முட்டி வில்லனாக நடிப்பாரா?

மம்முட்டி வில்லனாக நடிப்பாரா?
ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்தசாமி வில்லனாகவும் நடித்து, மோகன்ராஜா டைரக்டு செய்த படம் ‘தனி ஒருவன்’
‘தனி ஒருவன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க டைரக்டர் மோகன்ராஜா திட்டமிட்டு இருக்கிறார்.

‘தனி ஒருவன்-2’ படத்தில், மம்முட்டியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் நடிப்பதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யவில்லை.