சினிமா துளிகள்

விஞ்ஞானி வேடத்தில் ரகுமான்! + "||" + Rakuman in the role of scientist

விஞ்ஞானி வேடத்தில் ரகுமான்!

விஞ்ஞானி வேடத்தில் ரகுமான்!
‘புதுப்புது அர்த்தங்கள்,’ ‘கேளடி கண்மணி’ ஆகிய படங்களில் நடித்த ரகுமான் தற்போது, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார்.
‘செவன்’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த படத்தை ஷாபி டைரக்டு செய்தார். படத்தின் ‘டீசர்’ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர், சங்கல்ப் ரெட்டி டைரக்‌ஷனில் நடிக்கிறார். இந்த படமும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. வருண்தேஜ், அதிதிராவ் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

இதில், இந்தியாவின் முக்கிய விஞ்ஞானி கதாபாத்திரத்தில், ரகுமான் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக, இது அமைந்திருக்கிறது!