சினிமா துளிகள்

பனையூருக்கு குடிபெயரும் நட்சத்திரங்கள்! + "||" + Moving stars to Panayoor!

பனையூருக்கு குடிபெயரும் நட்சத்திரங்கள்!

பனையூருக்கு குடிபெயரும்  நட்சத்திரங்கள்!
ஒரு காலத்தில், தமிழ் பட நட்சத்திரங்களில் பெரும்பாலானவர்கள் சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்தார்கள்.
பின்னர், நீலாங்கரைக்கு குடிபெயர்வதை கவுரவமாக கருதினார்கள். இப்போது, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் குடியேறுவதை சவுகரியமாக கருதுகிறார்கள்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், விஜய்தான். அவரையடுத்து  சிவகார்த்திகேயன், குஷ்பு, விஜி சந்திரசேகர், ரியாஸ்கான், ஹிப் ஹாப் ஆதி என பல நட்சத்திரங்கள் வரிசையாக  பனையூரில் குடியேறி  வருகிறார்கள். சினேகா-பிரசன்னா தம்பதியும் பனையூரில் சொந்தமாக ஒரு பங்களா கட்டி வருகிறார்கள். இவர்களும் விரைவில் அங்கு குடியேற இருக்கிறார்கள்!