சினிமா துளிகள்

சிரஞ்சீவிக்கு வில்லன் + "||" + Jagapathi babu The villain of Chiranjeevi

சிரஞ்சீவிக்கு வில்லன்

சிரஞ்சீவிக்கு வில்லன்
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் தற்போது ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் பிற மொழியைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள். பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், தமிழில் முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதி, கன்னட முன்னணி நடிகரான சுதீப், தெலுங்கில் முன்னணி நடிகர்களான ஜெகபதி பாபு, அல்லு அர்ஜூன், நயன்தாரா, தமன்னா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது.


சிரஞ்சீவி கதாநாயகனாக வலம் வந்த அதே நேரத்தில் மற்றொரு முன்னணி கதாநாயகனாக இருந்த ஜெகபதி பாபு, இந்தப் படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.