சினிமா துளிகள்

சிம்பு ஜோடியான ‘மாடல்’அழகி! + "||" + Simbu paired 'model'!

சிம்பு ஜோடியான ‘மாடல்’அழகி!

சிம்பு ஜோடியான ‘மாடல்’அழகி!
மணிரத்னம் டைரக்‌ஷனில் வெளிவந்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர், டயானா எரப்பா.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க்கில் பிறந்த இவர், 2011-ம் ஆண்டில் நடந்த ‘மிஸ் இந்தியா’ போட்டியில், முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். தொடர்ந்து சில அழகி போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை வென்றார்.


இவருடைய எளிமையான அழகு, நளினம், நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக தமிழ் திரையுலகினரின் கவனம், இவர் பக்கம் திரும்பி இருக்கிறது. மணிரத்னம் படத்தில் நடித்திருப்பது, இவர் மீதான எதிர்பார்ப்பை கூட்டி   யிருக்கிறது!