சினிமா துளிகள்

கன்னடத்தில் இருந்து இன்னொரு நாயகி! + "||" + Another heroine from Kannada!

கன்னடத்தில் இருந்து இன்னொரு நாயகி!

கன்னடத்தில் இருந்து இன்னொரு நாயகி!
கன்னட திரையுலகில் இருந்து பல கதாநாயகிகள் தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள்.
அந்த வரிசையில், தற்போது அங்கு முன்னணி கதாநாயகியாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே, ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக வருண் நடிக்கிறார். போகன், நெருப்புடா, நைட் ஷோ ஆகிய படங்களில் நடித்தவர், இவர். வருண்-சம்யுக்தா ஹெக்டேயுடன் முக்கியமான கதாபாத்திரத்தில், ஒரு நாய் நடிக்கிறது. நட்டுதேவ் டைரக்டு செய்கிறார்.


சம்யுக்தா ஹெக்டே நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தில், துறு துறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ‘பப்பி’ படத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.