சினிமா துளிகள்

சுதாரித்த நாயகிகள்! + "||" + Heroines

சுதாரித்த நாயகிகள்!

சுதாரித்த நாயகிகள்!
சுதாரித்துக் கொண்ட நடிகைகள்.
தேசிய விருது பெற்ற படத்தின் மூலம் பிரபலமான குளிர்ச்சியான நாயகியும், ‘வழக்கு’ படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூரு நடிகையும் ஆரம்ப காலத்தில் நடித்த சில படங்கள் திரைக்கு வரவே இல்லை. அந்த படங்கள் அனைத்தும் ஒரு நாள், இரண்டு நாள் படப்பிடிப்புடன் நின்று போனது. இப்போது அந்த 2 நடிகைகளும் பிரபல நாயகிகள் ஆகிவிட்டார்கள்.

2 நடிகைகளும் இப்போது சுதாரித்துக் கொண்டார்கள். தங்களிடம் கதை சொல்ல வருபவர்கள் படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வருவார்களா? என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்களாம்!