சினிமா துளிகள்

பிரபுதேவாவும், 2 கதாநாயகிகளும்..! + "||" + Prabhu Deva and 2 heroines ..

பிரபுதேவாவும், 2 கதாநாயகிகளும்..!

பிரபுதேவாவும், 2 கதாநாயகிகளும்..!
பிரபுதேவா நடித்து, ஷக்தி சிதம்பரம் டைரக்டு செய்துள்ள `சார்லி சாப்ளின்-2,' விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சார்லி சாப்ளின்-2 படத்தில், பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து இருக்கிறார். இருவரும் பாடல் காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருக்கிறார்களாம்.

படத்தில் நடித்து முடித்துள்ள நிக்கி கல்ராணியிடம், பிரபுதேவா ஜோடியாக நடித்தது பற்றி கேட்கப்பட்டது. ``அவருடன் தொடர்ந்து பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்'' என்று நிக்கி கல்ராணி பதில் அளித்து இருக்கிறார்.


இதேபோல், பிரபுதேவா ஜோடியாக `யங் மங் சங்' படத்தில் நடித்து வரும் லட்சுமி மேனனும், ``இன்னும் 2 படங்களிலாவது பிரபுதேவா ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். `யங் மங் சங்' படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. `சார்லி சாப்ளின்-2' படத்தை அடுத்து பிரபுதேவா நடித்து வெளிவர இருக்கும் படம், இதுதான்!