சினிமா துளிகள்

3-வது முறையாக விஜய்-அட்லீ! + "||" + Vijay-Atlee for 3rd time

3-வது முறையாக விஜய்-அட்லீ!

3-வது முறையாக விஜய்-அட்லீ!
அட்லீ இதுவரை, ராஜாராணி, தெறி, மெர்சல் ஆகிய 3 படங்களை டைரக்டு செய்திருக்கிறார்.
தெறி, மெர்சல் ஆகிய 2 படங்களிலும் விஜய் நடித்தார். இரண்டுமே வெற்றி படங்களாக அமைந்ததில், விஜய்க்கு சந்தோஷம். அதனால் அட்லீக்கு மேலும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்து இருக்கிறார்.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகி யார், உடன் நடிக்கும் நடிகர்-நடிகைகள் யார்-யார்? என்ற முதல் கட்ட வேலை தொடங்கி விட்டது. வருகிற ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்குவது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.


விஜய் ரசிகர்கள், ‘சர்கார்’ படத்தை திரையில் காண காத்திருக்கும் நிலையில், விஜய்-அட்லீ கூட்டணியில் மேலும் ஒரு படம் உருவாகிறது என்ற தகவல், ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

தொடர்புடைய செய்திகள்

1. முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய்?
முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிக்க உள்ளாரா என தகவல் வெளியாகி உள்ளது.
2. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.
3. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
4. அதிமுக போராட்டம்: சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம்
அதிமுகவினர் போராட்டம் நடத்தும் நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
5. ‘சர்கார்’ படக்குழு வெளியிட்ட விஜய்-ன் புதிய தோற்றம்
‘சர்கார்’ படத்தில் விஜய்-ன் புதிய தோற்றம் கொண்ட புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டது.