சினிமா துளிகள்

சமரசம் செய்த தயாரிப்பாளர்! + "||" + Compromised Producer

சமரசம் செய்த தயாரிப்பாளர்!

சமரசம் செய்த தயாரிப்பாளர்!
ஒரு பிரபல தயாரிப்பாளர் இசை நடிகருக்காக சமரசம் செய்து வைத்தாராம்.
தனது படங்களுக்கு எதிர்மறையான பெயர்களை சூட்டி பரபரப்பை ஏற்படுத்தும் இசை நாயகன், சங்கத்தின் விதிமுறைகளை மீறி தனது படத்தை திரைக்கு கொண்டு வந்தார். இதற்காக அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று சங்கம் தடை போட இருந்ததாம்.

இந்த பிரச்சினையில், ஒரு பிரபல தயாரிப்பாளர் தலையிட்டு, இசை நடிகருக்கு சாதகமாக பேசி, இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தாராம்!