சினிமா துளிகள்

‘இதுதான் காதலா’ + "||" + This is love

‘இதுதான் காதலா’

‘இதுதான் காதலா’
புதுமுகங்கள் நடிக்க, ‘இதுதான் காதலா’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.
கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, இரண்டாவது நாயகியாக ஆயிஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். வி.எஸ்.முருகன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, டைரக்ஷன் பொறுப்புகளை ராஜசிம்மா ஏற்றுள்ளார். இவர், விஞ்ஞான மனிதராக நடித்தும் இருக்கிறார்.

படத்தை பற்றி டைரக்டர் ராஜசிம்மா கூறும்போது, ‘‘காதலையும், கம்ப்யூட்டரையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். ‘காதல்’ சுகுமார், கூல் சுரேஷ், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்’’ என்றார்.