சினிமா துளிகள்

ஸ்ரீதேவி பங்களாவில், பிரியா வாரியர்! + "||" + Priya Warrior in Sridevi Bungalow!

ஸ்ரீதேவி பங்களாவில், பிரியா வாரியர்!

ஸ்ரீதேவி பங்களாவில், பிரியா வாரியர்!
சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவைளுக்கு பிரியா பிரகாஷ் வாரியர் உடனே சம்மதம் சொல்லவில்லை. பட வாய்ப்புகளை ஏற்க தயங்கினார். டைரக்டர் மற்றும் பட அதிபரை சந்திக்க அவர் மறுத்து விட்டார். இது, 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கதை.
6 மாதங்களும் பிரியா பிரகாஷ் வாரியரை படக்குழுவினர் விடவில்லை. விடாமல் பின்தொடர்ந்தனர். இந்த நிலையில், அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் மாம்புள்ளி என்ற மலையாள டைரக்டர் இயக்குகிறார்.

படத்துக்கு, `ஸ்ரீதேவி பங்களா' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இவர், மோகன்லாலை வைத்து `பகவான்' என்ற பெயரில் ஒரு மலையாள படத்தை டைரக்டு செய்தவர். இது, 19 மணி நேரத்தில் உருவான படம்!