அஜித் ரசிகர்களுடன் சமரசம்!


கஸ்தூரி
x
கஸ்தூரி
தினத்தந்தி 23 Dec 2018 10:05 AM GMT (Updated: 23 Dec 2018 10:05 AM GMT)

சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் தலையிட்டு துணிச்சலாக கருத்து சொல்லும் நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். அஜித் நடித்து பொங்கல் வெளியீடாக வர இருக்கும் `விஸ்வாசம்' படத்தில் இடம் பெறும் ``வேட்டி கட்டு'' பாடலை கஸ்தூரி மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். ``இந்த பாடல், மிகப்பெரிய `ஹிட்' ஆகும். எல்லா விசேஷ நிகழ்ச்சிகளிலும் பாடப்படும்'' என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

முன்னதாக கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே சமூகவலைத் தளங்களில் மோதல் ஏற்பட்டது. ``அஜித் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்'' என்று ரசிகர்களை கஸ்தூரி கண்டித்தார். அதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கும், கஸ்தூரிக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலை, கஸ்தூரியின் வாழ்த்து சமரசம் செய்து விட்டதாக கூறுகிறார்கள்!

Next Story