சினிமா துளிகள்

ரூ.6 கோடி கேட்ட நடிகர்! + "||" + Rs 6 crore actor

ரூ.6 கோடி கேட்ட நடிகர்!

ரூ.6 கோடி கேட்ட நடிகர்!
இந்தி பட உலகை நம்பி மும்பையில் குடியேறி விட்ட நடிகர், விளையாட்டு படத்தின் மூலம் 2-வது ரவுண்டுக்கு வந்தார்.
அவருடைய மறுபிரவேசம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை.

என்றாலும், அந்த நடிகர் தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டார். சமீபத்தில் அவரிடம் ஒரு டைரக்டர் கதை சொல்ல சென்றாராம். அவரிடம், ரூ.6 கோடி சம்பளம் கேட்டாராம், நடிகர்! “கதை பிடிக்கவில்லை என்றால் இப்படி அதிக சம்பளம் கேட்பது அந்த நடிகரின் வழக்கம்” என்கிறார், ஒரு தயாரிப்பாளர்!