சினிமா துளிகள்

‘‘ஒரு அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டம்! + "||" + Is a akori and fight against evil forces!

‘‘ஒரு அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டம்!

‘‘ஒரு அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டம்!
நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் சாயாஜி ஷின்டே.
சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையும், நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் சாயாஜி ஷின்டே அடுத்து வர இருக்கும் ஒரு புதிய படத்தில், அகோரியாக நடித்து இருக்கிறார். படத்தின் பெயர், ‘அகோரி.’ அறிமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

‘‘சிவனடியாராக உள்ள ஒரு அகோரிக்கும், தீயசக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே படத்தின் கதை. இது, ஒரு முழுமையான திகில் படம். சாயாஜி ஷின்டே, மிகவும் ஈடுபாடு காட்டி நடித்துள்ளார். படத்துக்காக கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மிகப்பெரிய அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. சாயாஜி ஷின்டேயுடன் 200 அகோரிகள் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை பிலிம்சிட்டியில் நடந்தது. ஹரிதுவார் போன்ற அரங்கு அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் கதை நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். மைம் கோபி, ரியாமிகா, காதவி, வெற்றி, கார்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர்.பி.பாலா, சுரேஷ் கே.மேனன் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள்.