சினிமா துளிகள்

நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்! + "||" + Kajal Aggarwal to break Nayantara record

நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்!

நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்!
கங்கனா ரணாவத் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம், வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
இதையடுத்து அந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில், மனுகுமரன் தயாரித்து இருக்கிறார்.

தமிழில், ‘பாரிஸ் பாரிஸ்,’ தெலுங்கில், ‘தட்ஸ் மகாலட்சுமி,’ கன்னடத்தில், ‘பட்டர் ப்ளை,’ மலையாளத்தில், ‘ஜாம் ஜாம்’ என்று படத்துக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. தமிழ்-கன்னட படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

தமிழில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர், பலரின் கவனத்தை ஈர்த்து, யூ டியூப்பில் ‘நம்பர்-1’ ட்ரெண்டில் இருந்து வந்தது. தற்போது, இந்த டீசர் 7.2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டு உருவான நயன்தாராவின் ‘கோல மாவு கோகிலா’ 6 மில்லியன் பார்வைகளை பெற்று, யூ டியூப்பில் சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்த சாதனையை காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ பட டீசர் முறியடித்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெப் தொடருக்கு மாறிய காஜல் அகர்வால்
நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பிரியாமணி பேமிலிமேன் தொடரிலும் நித்யாமேனன் பிரீத் தொடரிலும் நடிக்கின்றனர்.
2. காதலில் சிக்கிய காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் நடித்து வருகிறார்.
3. “அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்
காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
4. ‘‘50 படங்களில் நடித்தது பெருமை’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு பாரிஸ் பாரிஸ், கோமாளி ஆகிய 2 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்–2 படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
5. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்
விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபல நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால்.