சினிமா துளிகள்

எதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு + "||" + Opportunity for actresses

எதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு

எதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு
கேரளாவில் நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் போர்க்கொடி தூக்கினர்.
அவரை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பது தொடர்பாக பிரச்சினைகளும் வெடித்தது. இதற்கான நடிகைகள் சார்பில் தனியாக சங்கம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதில் ரீமா கல்லிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர். நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அந்த நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து ரீமா கல்லிங்கலின் கணவரும் இயக்குனருமான ஆஷிக் அபு, ‘வைரஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் எதிர்ப்புகளால் வாய்ப்பின்றி தவித்து வரும், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோரை நடிக்க வைத்திருக்கிறார். டொவினோ தாமஸ், ஆசிப் அலி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தில், பகத் பாசில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.