சினிமா துளிகள்

டயானாவாக ஆசைப்படும் தீபிகா + "||" + Deepika wants to be diana

டயானாவாக ஆசைப்படும் தீபிகா

டயானாவாக ஆசைப்படும் தீபிகா
நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன், கடந்த ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘ஜீரோ’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் வந்து போனார். விரைவில் தொடர்ந்து படங்களில் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் ‘தீபிகா படுகோன்.காம்’ என்ற இணையதளத்தை அவர் தொடங்கியிருக்கிறார். இதில் தன்னுடைய வதந்திகள் இல்லாத உண்மையான விஷயங்களை ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், “இளவரசர் சார்லசின் மனைவி டயானாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது மறைவு எனக்கு மயக்கத்தை அளித்த ஒரு விஷயம். அவரது நடை, உடை, தன்னடக்கம் போன்றவை எனக்கு பிடித்த விஷயங்கள். அவரது வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்