சினிமா துளிகள்

ரஜினிகாந்தின் அடுத்த படம்! + "||" + Rajinikanth's next movie

ரஜினிகாந்தின் அடுத்த படம்!

ரஜினிகாந்தின் அடுத்த படம்!
ரஜினிகாந்த் நடித்து, கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷ னில் வெளிவந்த ‘பேட்ட’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த் அடுத்து யாருடைய டைரக்‌ஷனில் நடிப்பார்? என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை ரஜினிகாந்துக்கு பிடித்து இருப்பதால், அந்த படத்தில்தான் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசப்படுகிறது. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒரு கதையும் ரஜினிகாந்துக்கு பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ‘கபாலி,’ ‘காலா’ ஆகிய 2 படங்களிலும் அடுத்தடுத்து நடித்தது போல், ‘பேட்ட’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் நடித்தால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்!


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியானது -ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2. ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை
ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்
பண்டிகையின்போது பெரிய பட்ஜெட் படங்களையும், மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
4. ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைதாகி சிறையில் இருக்கிறார்கள்.
5. “ரஜினியுடன் நடிக்கும்போது ஜூனியர்-சீனியர் வித்தியாசம் தெரியவில்லை” நடிகை திரிஷா பேட்டி
“பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும்போது, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை” என்று நடிகை திரிஷா கூறினார்.