சினிமா துளிகள்

‘தனிமை’யில், சோனியா அகர்வால்! + "||" + In Loneliness actress Sonia Agarwal!

‘தனிமை’யில், சோனியா அகர்வால்!

‘தனிமை’யில், சோனியா அகர்வால்!
‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், சோனியா அகர்வால். தொடர்ந்து, ‘தம்,’ ‘கோவில்,’ ‘7 ஜி ரெயின்போ காலனி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இவருக்கும், டைரக்டர் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

சில வருடங்கள் இருவரும் ஒற்றுமையாக குடும்பம் நடத்தினார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்து கொண்டார்கள். செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின், சோனியா அகர்வால் சினிமாவை விட்டு விலகினார். விவாகரத்துக்கு பின், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

தற்போது அவர், ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். ‘தனிமை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ஒரு தமிழ் படத்திலும் நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். சிவராமன் இயக்குகிறார்.